கொலையில் உதித்த தெய்வங்கள், ஏழு கன்னிமார் கதை, கணியான் ஆட்டம், இருளர்களின் கதைப்பாடல்கள் , பாவைக்கூத்தின் பனுவல், நவீன கலையில் நாட்டுப் புறக்கூறுகள், நாயக்கர் கால ஓவியங்களில் நாட்டுப்புற கூறுகள், சடங்குகள், நிகழ்கலைகள் ஆகியவை பற்றிய கள ஆய்வு செய்த சிறந்த அறிஞர்களின் கட்டுரைகள்.போபாலிலுள்ள இந்திரா காந்தி ராஷ்ட்ரீய மானவ் சங்கராலயா ( IGRMS ) அமைப்புக்காகச் சென்னையில் ”வேரும் விழுதும் – தற்காலத் தமிழ் மக்களின் பண்பாடு” எனும் கருத்தரங்கம் ஒன்றை 25.7.1998இல் நடத்தினேன். தமிழ்நாட்டில் FOLKLORISTகளை பாளையம்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகியவற்றிலிருந்து ஒன்று திரட்டினேன். (அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது இலக்கிய உலகைக் காட்டிலும் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்களிடம் நான் பெரியவனா நீ பெரியவனா என்பது அதிகம் என்பது. ) இதில் கி.ரா போன்ற படைப்பிலக்கியவாதிகளையும் இணைத்தேன். இக்கருந்தரங்கைச் செய்வதற்கு என்னைத் தேர்ந்தெடுத்த IGRMS இயக்குநர் டாக்டர் கல்யாண்குமார் சக்கரவர்த்தி, ஓவியர் இராம. பழனியப்பன் ஆகியோருக்கு நன்றியுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.