எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார்.
1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் இது சொல்வது ஓர் இளைஞனுக்குள் நடக்கும் அழுத்தமான மனப்போராட்டங்களை மட்டுமே. சாதிகளற்ற சமுதாயமே அவனது கனவு உலகம். ஆனால் இறுதிவரையில் அவனது கனவு, கனவாகவே இருந்துவிடுகிறது.
'ஆயிரம் உண்டிங்கு சாதி' என்று கூறிய பாரதியின் சொற்கள் அன்றும் இன்றும் நடைமுறையாயிருப்பதை அவன் காண நேரிட்டிருந்தால், காலனை காலுக்கருகே அழைக்காமல் தன்னை அழைத்துச்செல்ல கைகூப்பி வேண்டியிருப்பான்' என்கிறார் இ.பா. தனது முன்னுரையில்.
கணையாழியில் தொடராக வெளிவந்த இந்நாவல், இ.பா.வின் சிறந்த படைப்புகளுள் ஒன்று.
Be the first to rate this book.