பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப்பொருளாகக் கையாளும் இவர் மனித மனவியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாகக் காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடாமல் வாசகருக்கான திறப்புகளைத் தன்னகத்தே கொண்டதே படைப்பு என்னும் உணர்வுடன் செறிவாக எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். அங்கங்கே கவிதைத் தெறிப்பு தோன்றும் எளிய மொழி இவரது கதைகளுக்கு வசீகரம் தருகிறது.
Be the first to rate this book.