காதல், ‘நான்’ என்ற வார்த்தையையே அறியாதது. காதலுக்கு ‘நாம்’ என்ற வார்த்தைதான் தெரியும். காதல் மிகவும் விரும்பக்கூடிய வார்த்தையும் அதுதான். காதலின் பேரால், ‘நாம்’ என்ற குடையின்கீழ் வந்தபிறகு, வேதனையும் சுகமாக மாறும். ஆதங்கம்கூட அன்பாக மாறும். தன் விருப்பத்தைக் காட்டிலும் தன் அன்புக்குரியவரின் விருப்பத்திற்காக வாழவேண்டும் எனும் எண்ணம் கிளர்ந்தெழும். அவர் விரும்புவது ஒருவகையில் நம்மை வதைப்பதாக இருந்தாலும்கூட, மனமகிழ்ந்து அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் காதல் நமக்குத் தரும். அதனால்தான், தன் மனதில் நாஸ்தென்கா மீது அளவுகடந்த காதலைக் கொண்டிருந்தபோதும், அவள் காதலனிடம், அவளது காதல் கடிதத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடிந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவளுடைய காதலில் குறுக்கிடாமல் இருக்க முடிந்தது. எப்போதும் ஒரே மாதிரியான அளவுகடந்த அன்பை நாஸ்தென்கா மீது வைத்திருப்பதற்கான முடிவும் பிறந்தது. இது காதல் மற்றும் காதலர்களைப் பற்றியதொரு பக்குவப்பட்ட கதை.
- எழுத்தாளர் வரதராஜன்
Be the first to rate this book.