தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கல். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.
5 பிரதாப் விஜயசங்கர்(என் கருத்து)
தனிமையில் வாழும் மனிதனின் மனசஞ்சலங்களும், அதன் ஊடாக அவன் படும் வேதனைகளையும் பற்றி தொடங்கும் இந்நூல், பின் அவன் வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளால் ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது, அவளின் வழியாக வாழ்வின் மறுபக்கம் உணர்கிறான். எனினும் அந்த சந்தோஷம் அவனின் வாழ்வில் நிலைகொல்லவில்லை. அதற்கான காரணம், எந்த சூழலில் அவளை அவன் சந்தித்தான், அவளின் வாழ்க்கை நிகழ்வுகள், இப்படியாக கதை நகர்கிறது.. இதுவே நம்மில் பெரும்பாலானவர்கள் கண்டுகளித்து மனம் நெகிழ்ந்த இயற்கை படத்தின் மூல கதை.. வாசிக்க வாசிக்க படிப்பவர்களை வசீகரித்து அவர்களை அந்த நிகழ்விடத்திற்கு அழைத்து செல்லும் எதார்த்த எழுத்தால்மையே இன் நூலின் தனிச்சிறப்பு..மூன்றே பாத்திரங்கள் கொண்டு ஒரு இலக்கிய வரலாற்று சிறப்பு மிக்க நூலை பதினெட்டாம் நூ்றாண்டிலிருந்து ஊருவாக்கிய பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி ஓர் இலக்கிய மேதை என்றால் இன்றியமையாது..
Prathab Vijay 02-08-2022 05:23 pm