இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான்.
ஐந்து குலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு இழையும் வஞ்சமும் சினமும் ஆற்றாமையுமாக மெல்ல மெல்ல உருத்திரண்டு வருவதை வரைந்துகாட்டுகிறது.
மகாபாரதத்தை அது நிகழும் காலத்திற்கே சென்று அதன் நிலத்தில் வாழ்ந்து அதன் உணர்ச்சிகளுடன் கலந்து வாசித்து அறிவதற்கான படைப்பு இது.
- ஜெயமோகன்
Be the first to rate this book.