கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு வேலையில் சேர்வதில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட பணியிலிருந்து ஓய்வு பெறுவது வரை ஒருவர் அலுவலகத்தில் என்னென்ன அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடும்?சொந்த வாழ்க்கையில் என்னென்ன தடைகளைச் சந்திக்க நேரிடும்?தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டிலும் வெற்றி பெற்று, சந்தோஷமாக மன நிறைவுடன் வாழ்வது எப்படி?அலுவலகத்தில், உங்களைவிட இளையவரை உங்களுக்கு மேலே நியமித் தால் எப்படிக் கையாள்வது?சக ஊழியருடன் சண்டை ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது?இல்லத்தரசியாக இருக்கும் மனைவியின் மனச்சோர்வை எப்படிப் போக்குவது?வேலைக்குப் போய் நம்மைவிட அதிக வெற்றிகளைக் குவிக்கும் மனைவியை எப்படி எதிர்கொள்வது?பணியாளர்களிடம் வேலை வாங்க அவர்களைத் திருத்திக் கொண்டே இருந்தால் போதுமா? ஒரு பணியாளரின் நல்ல குணங்களை அவருடைய பிரிவு உபசார விழாவில் மட்டும்தான் பேச வேண்டுமா?தனித்தனிக் கட்டுரைகள் என்றாலும் நூல் முழுவதும் ஒரு கதை பாணியில் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.