நீர், நிலம், காற்று, கேள்விகள், உயிர் வாழ்வதற்கு இவை அத்தியாவசியம். கேள்விகளை எதிர்கொள்ள ஒரே வழி விவாதிப்பதான். வெந்து தணிந்த காடுகள், வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாவல். உயிர்த் துடிப்புள்ள பாத்திரங்களைப் படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்புப் பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி. பக்கங்களைப் புரட்டும்போதே கைவிரல்களில் தீப்பற்றிக்கொள்கிறது.
Be the first to rate this book.