ஏன் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொல்வதன்மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி விடமுடியாது என்பதுதான்.
எத்தனைப் பெரிய குற்றத்தை ஒருவர் இழைத்தாலும் அவரைக் கொல்வதன்மூலம் அந்தக் குற்றத்தைப் போக்கிவிடமுடியாது. தவிரவும், மரண தண்டனை இருந்தால் குற்றங்கள் குறையும் என்னும் வாதத்திலும் உண்மை இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால்தான், உலகமே மரண தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியா செல்லவேண்டிய திசையும் இதுதான் என்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி. சட்டத்தின் அடிப்படையில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றாலும் அடிப்படையில் அதுவும் ஒரு கொலையே. மத்திய காலங்களில் பின்பற்றப்பட்டுவந்த இந்த அநாகரிகத்தை ஒரு ஜனநாயக நாடான இந்தியா பின்பற்றக்கூடாது என்கிறார் நூலாசிரியர். மரண தண்டனைக்கு எதிரான மனிதநேயமிக்க ஒரு குரல் இந்நூல்.
Be the first to rate this book.