குறுக்குத் துறையும் கம்பா நதியும் அதே ஊரில் தான். சாந்தாவும் பாலம்மாக்க்காவும் அதே ரதவீதியில் தான். எல்லா மனுஷிகளும், மீனா, பர்வதம், மூக்கம்மா, சந்தனம், தாயம்மா, விசாலம் எல்லோரும். ' ஒண்ணா பண்ணி ரெண்டா பிட்ட' மனுஷிகள் தான். ஆண்களுக்குத் தான் ஒட்டவைக்கத் தெரியவில்லை. வேயன்னா, திரவியம்,தெய்வு, மந்திரம் எல்லோரும் பிரியம், காதல், காமம் என்று ' பலிச்ச மட்டுக்கும்' பார்க்கிறார்கள். தேங்காயைத் தென்னை ஆக்கும் நுட்பம் யாருக்கும் அடைபடவில்லை. எத்தனை தலைமுறை ஆனாலும் வாழும் பாம்பு உத்தரத்தில் இருந்து இறங்கி, தோமராக் கட்டில் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கிறது.
- வண்ணதாசன்
Be the first to rate this book.