தொடர்ந்து கவிதை மற்றும் சிறுகதை என இரு தளத்திலும் சிறப்பாக இயங்கி வரும் ஜி.சிவக்குமாரது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதில் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மகிழ்ச்சி கொள்கிறது.
இவரது சிறுகதைகள் எளிமையும் அழகும் கூடியவை. பழகிய நிலத்தில், பழகிய மனிதர்களுடைய , பழகிய சந்தர்ப்பங்களின் அழகிய தருணங்களைத் தனது கதையின் பின்புலமாகக் கொண்டிருக்கிறார். பல்வேறு இதழ்களில் வெளியாகி வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை. இந்தக் கதைகளில் பெரும்பான்மையானவற்றில் கதைசொல்லியே கதையின் நாயகனாக இருக்கிறார். தன்னனுபவங்களிலிருந்தும் அது தரும் உணர்வுகளின் தள்ளாட்டங்களில் இருந்தும் இந்தக் கதைகள் உருவாகியிருக்கின்றன. இயற்கையையும், வனத்தையும் குறிப்பாக யானைகளை நேசிக்கும் ஒரு கதைஞனுடைய கதைகளில் சிலவற்றில் சித்திரமாகியிருக்கும் யானைகள் வெகு அழகான தரிசனங்களைத் தருகின்றன. நீரோட்டம் போலான மிகத் தெளிவானதாகவும் தண்மையுடனுமான வாசிப்பனுபவத்தைத் தருகின்ற கதைகள் இவை
- பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
Be the first to rate this book.