புயலும், மழையும் சுழன்றடித்து, உப்பங்காற்று வீசி, எப்போதும் சொத சொதப்பும் ஈரமும் கொண்டு, உப்புதேலி நொதித்தும் புளித்துமிருக்கிற கடலோரத்து ஊர்களிலும், அந்தக் கடலோரத்திலேயே திணை மாற்றமாகக் கிடக்கும் குன்றுக் காடுகளிலும், புயல் காற்றுக்கேற்ப இயைந்து அல்லாட்டத்துடன் வாழ்ந்திடும் மனிதர்கள் முத்துவேலின் கதைகளெங்கும் விரவிக் கிடக்கிறார்கள்.
ஒருவருக்கு என்ன எழுதவேண்டும் என்று தெரிந்திருந்தால், எப்படி எழுத வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அவர் எழுதத் தொடங்குகின்ற போதிலேயே அது தன்னை உருவாக்கிக் கொள்ளும்! முத்துவேல் என்ன எழுத வேண்டும் என்று தெரிந்தவராக இருக்கிறார். அவரின் கதைகளில் மானுட அன்பும், மனித கரிசனையும், வாழ்க்கையின் அல்லல்களை பதிவு செய்வதன் ஊடே, அவற்றின் பின்னாலிருக்கும் அரசியலையும், சமூக அமைப்பையும், மனித இழிமைகளையும் விசாரிக்கின்ற கலைஞனுக்கேயுரிய கோபாவேசமும் துலக்கமாக இருக்கின்றன. மிகவும் தன்னியல்பாக வெளிப்படுகின்றன.
- அழகிய பெரியவன்
5 வெல்லங் கொண்ட அகரம்
சூப்பர்
Krishnamoorthy p 19-10-2023 09:31 pm