‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கியவருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறது.
நடிகர்கள், இயக்குநர்களுடன் பாரதப் பிரசங்கி, புகைப்படக்கலைஞர், ஆர்மோனியக் கலைஞர், ஒளியமைப்பு - ஒப்பனைக் கலைக் கலைஞர், துடும்பு இசைக்கலைஞர் போன்றோரையும் கவனத்திற்குள்ளாக்குகிறார் ரங்கராஜன். தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பாகவதமேளா, கைசிக நாடகம், துடும்பு இசை என விதவிதமான நிகழ்த்துக் கலை சார்ந்த ஆளுமைகளை இந்நூலில் சந்திப்பது போன்ற மனப்பதிவை இந்நூல் ஏற்படுத்துகிறது.
Be the first to rate this book.