தலைப்பே சுட்டிக்காட்டுவதுபோல, மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி இந்நூல் பேசுகிறது. நாம் அரசியல் இறையாண்மை, பொருளியல் இறையாண்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மையறியாமலேயே நம் மண்ணும் நீரும் அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. நாம் வேளாண்மை செய்யும்போது அதில் முதலீடு செய்யும் தொகையில் பெரும்பகுதி நேராக அன்னிய நிறுவனங்களுக்குச் செல்கிறது. நவீன வேளாண்மை என்பது நம் நிலத்தை படிப்படியாக நம்மிடமிருந்து அன்னியமாக்குகிறது. பாமயன் நல்ல தமிழில் எழுதக்கூடிய வேளாண் அறிவியலாளர். அவரது முக்கியமான நூல் இது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை வழி வேளாண்மை பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இடைவிடாது களப்பணியில் இருந்து வருபவர். இருபதுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். பல மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். கட்டுரைகள் தினமணி, இந்து தமிழ் நாளிதழ், தமிழினி, தமிழர் கண்ணோட்டம் முதலிய பல இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவர். சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது, சிறந்த வேளாண் அறிவியலாளர் விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். தமிழில் அலையாத்திக் காடுகள், மரபீனி முதலிய ஏராளமான கலைச் சொற்களை உருவாக்கியுங்ளளார். தமிழர்களுக்கு என்று தனியான சாதி சமயமற்ற சிந்தனை மரபு உண்டு என்றும் அதன் பெயர் திணையியல் என்றும் விளக்கி, தமிழர்களின் தொன்மையான சிந்தனை மரபான திணையியல் போட்பாட்டை மீட்டெடுத்தவர்.
Be the first to rate this book.