தன் வயலுக்குப் புறத்தில் ஒட்டியிருக்கும் மற்றக் குடியானவர்களின் கால்காணி, அரைக்காணியையும் பிடுங்கிக்கொண்டு தனது பண்ணையடிமையாக்கிக் கொள்பவனுக்குத் தன்னை விற்றுக்கொள்ளாததும், அதனால் தன் குடும்பத்து வாரிசை வஞ்சகமான கொலைக்குப் பலி கொடுப்பதும், அதைப் பழிதீர்ப்பதும் என விவரித்துச் செல்வது 'வெக்கை' நாவல்.
பகைமையின் நுண்ணரசியலைத் தனக்குள் தானே உரையாடி நகர்கிறது. சுரண்டலை நிகழ்த்தும் மனிதர்கள் மீது; சுரண்டலுக்கு வழிவிட்டு நிற்கும் அதிகாரத்தின் மீது கொள்ளும் கோபத்தை, அறச்சீற்றத்தை மகனுக்கும் தந்தைக்குமிடையில் நடக்கும் உரையாடலின் வழி, நினைவுகூர்தலின் வழி காட்டிப் பொதுமனத்தின் மனசாட்சியைக் கிள்ளப்பார்க்கிறது.
Be the first to rate this book.