உலகத்தைப் புரிந்துகொள்ள முயலாமல் தன்போக்கில் ஆத்ம தரிசனத்தோடு ஆழமாக அன்பு செலுத்தவும், முற்றாக நேசிக்கவும் விரும்பும் அப்பழுக்கற்ற ஒரு மனிதனை இவ்வுலகம் எவ்விதமாக வெல்லாம் கேலி செய்கிறது என்பதோடு அவற்ரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும் பழிபாவமற்ற ஒரு மனிதனின் கதையே இந்நாவல். பொய்மையும், பகைமையும், போலிமையும், அற்பத் தந்திரங்களும் மேலோங்கிய ரஷ்ய நாட்டு உயர்குடிச் சமூகத்தின் மீதான புகார்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கும் இந்நாவல், வாழ்வின் நிதர்சனமான உண்மைகளை அதன் கவித்துவமான அழகுடனும் எளிமைப்பாங்கோடும் விவரித்துச் செல்கிறது.
Be the first to rate this book.