நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருஷம் கூடவே இருந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இந்த நூலை அவர் எழுதினார். பல துறைகளில் புகழ்பெற்ற திருச்சி ராஜன் அவர்கள் பெரிய டாக்டர் என்பது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குங் கூடத் தெரியும். கத்திச் சிகிச்சையில் பேர் போனவர். தம்முடைய நாற்பது வருஷத்து வைத்திய ஆராய்ச்சியையும் அநுபவத்தையும் கொண்டு சாதாரண மக்களுக்கென்று அவர்கள் எழுதிய இந்த நூல் மிகவும் பயன்படக்கூடிய புஸ்தகம் என்பதில் சந்தேகமில்லை.
- சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
Be the first to rate this book.