வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுபடுத்துவது என்பதையும் வீட்டுச் செலவைக் குறைக்கும் பல்வேறு பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிறார், சோம வள்ளியப்பன்.
கார்பரேட் நிறுவனங்களில் பயன்படுத்தும் பல நிதி மேலாண்மை டெக்னிக்குகளை, வீட்டு பட்ஜெட்டில் செலவைக் குறைக்க எப்படி பயன்படுத்தலாம் என்பதை, தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் அழகாக விளக்குகிறார். பாருங்கள் ஆனால் வாங்காதீர்கள் என்ற நோஷனல் பர்சேஸ், பிரச்சனைகளில் மாட்டிவிடும் ரொட்டீன் மற்றும் இம்பல்சிவ் பர்சேஸ், தேவை இல்லாதவற்றை வாங்கத் தூண்டும் பெர்செப்ஷன் என்ற கோளாறு. வழக்கம் போல என்று வாங்காமல் ஜீரோ பேஸ்ட்டு ஆகப் பார்த்தலின் அனுகூலம், பிரையாரைடேஷன், வீட்டு செலவுகளில் செய்யக்கூடிய பிராடக்டிவிட்டி மற்றும் காஸ்ட்-பெனிபிட் அலசல், எதையும் தேவையா என்று கேள்வி கேட்கும் சேலஞ்ச் த ஸ்டேடஸ் கோ, கவனித்து உறுதி செய்யவேண்டிய லாங் டெர்ம் பெனிபிட்ஸ் – என்று வீட்டு பட்ஜெட் போடுவதை மிக புதிய முறையில் சுவாரசியமாக விளக்குகிறார்.
குமுதம் சிநேகிதியில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகிகளின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற விபரங்கள், புத்தக வடிவில் உரிய படிவங்களுடன்.
Be the first to rate this book.