வாசிப்பு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டுமானால், எப்போதும் நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்ணில் படும்படி புத்தக அலமாரியை அமைக்க வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு அடுக்கக் கூடாது. புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம்மை அறியாமலேயே நம் கவனம் அவற்றை ஆழ்மனதுக்குச் செலுத்தும்.
- எஸ். ராமகிருஷ்ணன்
சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியம் மீது தீராக் காதல் உண்டு. சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருபவர்.
Be the first to rate this book.