வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 278 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள் முதன் முறையாக இந்நூல் இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. விரிவான அடிக்குறிப்புகளுடன் வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறது. முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச, மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, சித்தர் பாடல் தொகுப்பு போன்ற நூல்களை செர்மனில் மொழிபெயர்த்தவர். வீரமாமுனிவரின் அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர்கலம்பகம், அடைக்கல மாலை பாடல்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அழகியல், பன்முகப் பண்பாட்டு உரையாடல் போன்ற துறைகளில் ஆய்வு செய்து வருகிறார்.
Be the first to rate this book.