அடக்குமுறைக்கு எதிரான போரில் பங்கேற்கும் பல ஆயிரம் இளைஞர்களால் காலம்காலமாக வாசிக்கப்பட்டு வருகிறது ‘வீரம் விளைந்தது’ நாவல். இந்த நாவல் எழுதப்பட்டவுடன் முதலில் படித்துப் பாராட்டியவர் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி. ரஷ்யாவில் 1917-இல் நவம்பர் புரட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு தொழிலாளர்கள், செஞ்சேனையின் வசம் அந்த நாடு சென்றது. ஆனால், புரட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில் எதிர்ப் புரட்சிப் படைகள், ஏகாதிபத்திய நாடுகளின் படைகள், நிலப்பிரபுக்களின் படைகளை எதிர்த்து 1922 வரை செஞ்சேனை போரிட்டது. இந்தப் போரில் 16 வயதில் பங்கெடுக்க ஆரம்பித்த பாவெல் கர்ச்சாகின் என்ற இளைஞனின் வீரதீரப் போராட்டமே இந்நாவல். போரில் மோசமாகக் காயமடைந்த பின்னரும், ஒரு கண்ணில் பார்வையை இழந்த பின்னரும், கை-கால்கள் செயலிழந்த பின்னரும் போராட விரும்புகிறான் பாவெல். தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வேலைகளைத் தேடித் தேடி செய்கிறான். முடிந்த வழிகளில் எல்லாம் போராடுகிறான். 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்த நாவலின் ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கிதான் பாவெல். அவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதே இந்த புகழ்பெற்ற நாவல். -எஸ்.ஏ. பெருமாள்
Be the first to rate this book.