மக்கள் போராட்ட வரலாறுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முறையாக கடத்தாவிட்டால்...
பொய்யும் புரட்டும் புரட்சி வேடமிட்டு...
வரலாற்று நாயகர்களாக...
சந்திரசேகர்ராவ்களாக
ரேவந்த்ரெட்டிகளாக
வலம் வருவார்கள்...
மகத்தான மக்கள் இயக்கங்கள் ஓரங்கட்டப்படும்...
0.22 சதவிகிதத்திற்கு ஓரங்கட்டப்படும்...
தெலங்கானா மக்கள் இயக்கம்
பத்தாயிரத்திற்கும் மேல் ஆயுதப் படையைத் திரட்டி
3000 கிராமங்களை விடுவித்து
ஆண்டுகள் கணக்கில் ஆட்சி செய்தது...
பதியப்பட்ட உயிர் தியாகங்கள் 6000
பதியப்படாத போராட்ட மரணங்கள் பல ஆயிரம்...
பத்தாயிரத்திற்கும் மேல் பல ஆண்டு சிறை தண்டனைகள்
லட்சக் கணக்கில் சித்ரவதை முகாம்களில்...
தேர்தல் முடிவுகள் அளவு கோலாகக் கொண்டு பார்த்தாலும்...
முதல் பொது தேர்தலில்...
தெலங்கானா மற்றும் தெலங்கானா வை ஒட்டிய ஆந்திரப் பகுதிகளில்
19 நாடாளுமன்ற தொகுதிகளில்
60 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி...
மகத்தான மக்கள் இயக்கம்
0.22 சதவிகிதமாக ஓரங்கட்டப்பட்டது
பொறுப்பேற்க வேண்டிய தலைமையோ...
எறும்பு கடியளவு கவலையுமின்றி...
கெத்தா...
வேற்று கிரகத்தினர் யாரையாவது பொறுப்பாக்கி...
வக்கனையா...
அறிக்கைகள் தயாரிக்க...
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்
மேற்கோள்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்...
Be the first to rate this book.