பத்தாண்டுகளுக்கு முன் மழையைப் பகிர்ந்துகொண்ட பிருந்தா இப்போது வீடு முழுக்க வானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட ஆண்டுகளில் வாழ்க்கையின் பல காதங்களைக் கடந்துவந்திருக்கிறார் என்பது கவிதைகளில் தெரிகிறது. அதன் மேடுபள்ளங்களும் சமதளங்களும் இயற்கைக் காட்சிகளும் கவிதைகளில் ஊடுருவிச் சென்றிருப்பதை உணர முடிகிறது. ஆமையின் கனத்த ஓடாகவும் மாட்டின் மூர்க்கமான மூச்சில் விடைத்த மூக்கின் பொந்துகளாகவும் வெப்பமான கைகுலுக்கலாகவும் கிழிந்த உதடாகவும் அவரைச் சுற்றியுள்ள வாழ்க்கை பல வகைகளில் இயங்குவதைப் பிருந்தாவின் கவிதைகள் பதிவுசெய்கின்றன. மழைக்குப் பின் வருவது நிர்மலமான வானம். ஆனால் இங்கே வீட்டை நிறைத்திருப்பது பெருமழை வரப்போவதைச் சூசகம் காட்டும் வானம். பெருமழைக் கவிதைகள் வரட்டும். வீட்டிலும் வெளியிலும் கொட்டிக் காலநிலையை மாற்றட்டும்.
Be the first to rate this book.