ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் சிந்தனைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன. இந்தச் சிந்தனைகள் எப்போது எதற்காக எப்படித் தோன்றுகின்றன என்பது தெரியாது. நொடியில் தோன்றி மறந்து போகும் இவற்றை அவற்றை நடைமுறைப்படுத்தினால் இப்போது கிடைக்க கூடிய வசதிகளை எவ்வளவோ பெருக்கிக் கொள்ளலாம்.
அவற்றில் மாற்றங்களைப் புகுத்தலாம். செலவுகளைக் குறைக்லாம். அது மட்டுமல்ல. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். பொருளதாரத்தை உயர்த்தலாம். அதற்கு உதவும் பல சிந்தனை கொகுப்புகள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பு கட்டுமானத் தொழில் தொடர்புடையது. இருந்தாலும் இதை ஓரு துறை சார்ந்த பயன்பாடு கொண்டது என்று ஓதுக்கி விட இயலாது.
இதிலுள்ள யோசனைகளை புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம் . கட்டிய வீட்டில் மாற்றக்களைச் செய்ய நினைப்பவர்களும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிவியல் பொறியியல் அறிஞர்களும் யோசிக்கலாம்.
கட்டடக் கலை பயில்பவர்களுக்கு இவை பெரிதும் உதவும். இல்லங்களில் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழிக்கும் மகளிரின் தேவைகளை நிறைவேற்றத் தக்க யோசனைகளை இதில் ஏராளம்.
மகளிரின் உடல்ரீதியான சிரமங்களை குறைக்கவும் ,இந்த மாற்றங்களை பெரிதும் உதவும், அலுவலகங்களுக்குப் பயன்படக் கூடிய யோசனைகளும் இதில் இருக்கின்றன.
Be the first to rate this book.