திருக்குர்ஆன் ஒரு பொறியியல் வல்லுநரின் வரைபடத்திற்கு (Blue Print) ஒப்பானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பானது. அடிப்படைகளைக் குர்ஆன் வழங்குகிறது. விரிவான விதிமுறைகளை நபி வழங்குவார். இந்தக் கோட்பாடுகள் நபிகள் நாயகம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டு விட்டன. அறியாமையிலும் ஆதிக்க உணர்வுகளிலும் மனித உரிமை மீறல்களிலும் சமூக அரசியல் பொருளாதாரச் சுரண்டல்களிலும் மூழ்கியிருந்த சமூகத்தை 23 ஆண்டுகளுக்குள் இஸ்லாம் மாற்றி அமைத்தது. பின்னர் உலகெங்கும் பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தி வருகிறது.
இறைவாக்கு ‘குர்ஆன்’ என்றும், நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படும். சில ஆயிரம் பக்கங்களில் விரிந்து கிடக்கும் இஸ்லாமியக் கருத்துகள் எல்லாரும் அறிந்திடும் வண்ணம் சுருக்கமாக இந்த நூலில் தரப் பட்டுள்ளன. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதார்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித் தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை எளிதில் அறியும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்றது. பல பதிப்புகளைக் கண்டது.
Be the first to rate this book.