எஸ்ஸார்சியின் எளிய வசன கவிதையின் மூலம், வேத கால வாழ்க்கையைப் பற்றி சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள முடிகிறது.
இக்காலத்தில் விவாதிக்கப்படுகின்ற பல பாலியல் சம்பந்தமான சர்ச்சைகளும், அக்காலத்தில் இருந்திருக்கின்றன. யமனுக்கும், அவனுடைய சகோதரியாகிய யமிக்குமிடையே நிகழும் சம்வாதம் மிக சுவாரஸ்யம் வாய்ந்தது. எஸ்ஸார்சி அதை அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
வேதங்களில் இக்காலத்தில் முற்போக்குக்கு அடையாளமாகக் கருதப்படும் பல கருத்துக்கள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இவற்றைப் படித்தால்தான் நமக்கு இதில் நமக்காக எத்தனை ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என்பது புரியும்.
- இந்திரா பார்த்தசாரதி
Be the first to rate this book.