"இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்!
இந்நாவலில் நாம் ரசித்துச் சிரிக்கக்கூடிய அத்தனை இடங்களுமே மறுவாசிப்பில் உறையவைத்துவிடுபவை. நடப்பு அரசியலை இத்தனை உண்மையாக அணுகி, நேர்மையான விமரிசனப் பார்வையுடன் அலசி, வலிக்காத அங்கதத்துடன் வெளிப்படுத்தக்கூடிய படைப்பு வேறொன்று இல்லை.
இந்நாவல் 1997-ம் ஆண்டு பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றது."
-கிழக்கு பதிப்பகம்
இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா வின் அங்கதம் மென்னகை பூக்க வைப்பதோடு, சில சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைப்பதாகவும்,மறைமுகமாகச் சாடுவதாகவும் இருக்கும். 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் இவரது 'வேதபுரத்து வியாபாரிகள்' ஒரு மிகச் சிறப்பான அரசியல் அங்கத நாவல்
Be the first to rate this book.