ரிக்வேதம், யஜூர்வேதம் , சாம வேதம், அதர்வ வேதம் என வேதங்கள் நால்வகைப்படும். குடியேற்றக்கார்ர்களான பழைய ஆரியர்களின் நம்பிக்கைகள், மனோபாவங்கள் , சமுதாய நிலை, கற்பனைகள் போன்றவை இந்நூலிகளில் சிதறிக்கிடக்கின்றன. வேதங்கள் ''கடவுளால்' அருளப்பட்டதாக இந்துக்கள் கருதுகின்றனர். வேதங்களை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்தவரும், ஆரிய சமாஜம் என்ற இயக்கத்தின் நிறுவனருமான தயானந்த சரஸ்வதி "சிருஷ்டியின் ஆரம்பத்தில் சர்வ சக்திவாய்ந்த கடவுள் வேதங்களைப் படைத்தார்" என்று எழுதியதுடன் அதனை உண்மையென நம்பவும் செய்தார். நான்கு வேதங்களிலுமாக 20358 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
Be the first to rate this book.