வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது.
இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது.
தொழிற்சாலை, அலுவலகம் என்று காலத்தைக் காசாக்கும் அவசர இயந்திர வாழ்க்கையிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கும்போது மனம் ஆன்மிகத்தையும் நல்ல விஷயங்களையும் நாடுவது பொதுவான இயல்பு.
அப்பேர்ப்பட்டவர்களுக்கு அருமருந்தாக இந்தப் புத்தகம் விளங்கப் போகிறது.
வைதிக, புரோகிதப் பணியில் இருப்பவர்கள்கூட ஸ்வர சுத்தத்துடன் வேதம் ஓத வழிவகை செய்யப் போகிறது இந்நூல்.
ஏகப்பட்ட தகவல்களுடன் இதைத் தொகுத்திருக்கிறார் சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார். சின்னஞ்சிறு வயதில், காஞ்சி பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்துடன் வேத பாடசாலையில் பயின்ற இவர், பிற்பாடு அநேக கும்பாபிஷேகங்களைத் தலைமை தாங்கி நடத்தியவர்.
Be the first to rate this book.