நிச்சயமின்மைகளுக்கு இடையிலானவொரு வாழ்வைப் பெற்ற, அனிச்சத்தைப்போல மனதைக் கொண்ட பாபு, இக்கவிதைகளில் தன் மொழியின் வழி கண்டடையும் பெண்கள், குழந்தைகள், மனிதர்கள், இடங்கள் உட்பட அனைத்திற்கும் அனாதரவான தோற்றத்தைக் கொடுத்துப் பின் அவற்றை அவ்வளவு வாஞ்சையுடன் அரவணைத்துக்கொள்கிறார். வாழ்வை ஏற்று விலகுவதும், விலகி ஏற்பதுமான ஒரு கதம்பம் இக்கவிதைகளில் சதா நிகழ்கிறது.இங்கிருந்துத் தன்னைச் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள, தன்னைப்போலவே எளிய உருவம் கொண்ட மொழி நடையுடன், தன் வாழ்நாளுக்குமான கவிதைகளை நமக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
- கண்டராதித்தன்
மிக நேரடியான ஒற்றையுடலும் எந்தவிதமான கருத்தியல், தத்துவபாரங்களும் இல்லாத உணர்ச்சிக்கோலங்கள் என்று தோற்றம்கொள்பவை இந்தக் கவிதைகள். ஆனால், நம்ப முடியாத ஒரு கணத்தில் லெளகீகத்தின் எளிய பாடுகளை நுட்பமாக வேறோர் இடத்துக்குக் கொண்டுசென்று விடுபவை. ஒரு குழந்தை அன்னையிடம் விளையாடுவது போல பாபு கவிதையோடு விளையாடுகிறான். எல்லா விளையாட்டும் எங்கோ ஓர் இடத்தில் தீவிரமாகிவிடுவதைப் போல ஒரு ரகசியமான தருணத்தில் இந்தக் கவிதைகள் அசாதாரண வடிவெடுத்துவிடுகின்றன. அதுவே இக்கவிதைகளின் பெரும் வசீகரமாய் இருக்கிறது.
- இளங்கோ கிருஷ்ணன்
Be the first to rate this book.