இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. இப்படியெல்லாம் கருவிகள் இருக்கின்றனவா என வியக்க வைப்பவை! படங்களுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
“கொம்புக்குச் சேத்தியான கருவி தப்பு. தப்பும், கொம்பும் சேந்தா எட்டு ஊருக்குச் சத்தம் கேக்கும். இப்போ தப்புக்கு இருக்கிற மரியாதை கொம்புக்கு இல்லே. சாமி உலா, கல்யாணம் எதுவா இருந்தாலும் கொம்பு ஊதுற கலைஞன் தான் முன்னாடி போகணும். இப்போ எல்லாம் மாறிப்போச்சு. பெரிசா யாரும் மதிச்சுக் கூப்பிடுறதில்லே.. அப்படியே கூப்புட்டாலும் அவங்க குடுக்கிறது தான் கூலி. இவ்வளவு வேணுன்னு கேட்டா அடுத்த வருஷத்துக்குக் கூப்பிட மாட்டாங்க. இத ஊதுறதுக்குக் காத்து மட்டும் போதாது. உசுரயே குடுத்து ஊதணும். நல்ல சாப்பாடு சாப்பிட்டாத்தான் ஊதமுடியும். நம்ம வாழுற வாழ்க்கையில அதுக்குச் சாத்தியமில்லே. தம் கட்டணும்ன்னா கொஞ்சமாச்சும் சரக்கு உள்ளே போவணும். இல்லேன்னா உள்ளேபோன காத்து காத்தாத்தான் திரும்பி வரும். வருஷத்தில எங்காவது ஒண்ணு ரெண்டு ஆர்டர் வரும். சில அரசியல் மீட்டிங்குகளுக்குக் கூப்பிடுவாக. மத்தபடி நமக்கு முழுநேரத்தொழில் விவசாயம் தான். ஒரு கௌரவத்துக்காகத் தான் கொம்பு ஊதுற பொழைப்பு...” என்று தங்கள் நிலையை வார்த்தையாக்குகிறார் கொம்பு ஊதும் கலைஞர். இப்படி எண்ணற்ற பழந்தமிழரின் பெருமைக்குரிய இசைக்கருவிகள் மற்றும் அதை இசைப்பவர்களின் இன்றைய நிலை குறித்தும் அந்தந்தக் கலைஞர்களையே நேரில் சந்தித்து எழுதப்பட்ட நூல்!
Be the first to rate this book.