இறைவன் படைத்த படைப்பில் எத்தனையோ இன்பங்கள் காணக்கிடக்கின்றன. இன்பமாக இருக்க வேண்டுமென்றுதான், ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். இந்த நிலையைக்கண்டுதான், பாரதியார் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா '' என்று பாடுகிறார்.எங்கு நோக்கினும், இன்பம் இருப்பதைக் காண்கிறோம்.ஆனால் நம்முடைய வாழ்க்கையில் இன்பத்தைக் காணுகிறோமா? அல்லது துன்பம் என்ற கடலில் அலைமோதிக் கொண்டிருக்கிறோமா ? சிந்தித்துச் செயல்படுவதின் மூலம்தான் நம்முடைய வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொள்ள முடியும் . வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. ஆனால் அதன் முடிவுகளை அறிந்து கொள்ளுமுன் இறந்து விடுகிறோம்' என்று ரஸ்ஸல் கூறுகிறார்
Be the first to rate this book.