எனக்கு நீண்ட நாளாக ஒர் ஆசையிருந்தது. தமிழ்நாட்டின் பிரபல நகைச் சுவை எழுத்தாளர்கள் சிலர் இருக் கிறார்களே, அவர்களேப்போல் நாமும் எழுதவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
“அடேயப்பா, இது நம்மால் முடிகிற காரியமா!” என்று நினைத்துக் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து பார்த்தேன்.
ஆனால், ஆசை என்னை விடவில்லை. “என்ன ஐயா, புத்தர் பெருமானாலே என்னைத் துரத்த முடியவில்லையே? ‘துன்பத்துக்குக் காரணம் ஆசை. ஆசையை அறவே ஒழிக்கவேண்டும்’ என்று எவ்வளவோ பிரசாரம் செய்து தான் பார்த்தார்; அவரால் முடிந்ததா? உம்மால் எப்படி முடியப் போகிறது? உம், கட்டிய கையைத் தளர்த்திப் பேனாவைக் கையில் எடுத்து, எழுத ஆரம்பியும். பயப்படாதீர்!” என்று அபயம் அளித்து அடிக்கடி தூண்டவும் ஆரம்பித்துவிட்டது.
நாள் ஆக ஆக, அந்த ஆசையின் சீடனாகிவிட்டேன்! அப்புறம் நான் எழுதிய விஷயங்கள்தான் இதில் காட்சி அளிக்கின்றன.
- அழ. வள்ளியப்பா
Be the first to rate this book.