திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக
திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற -சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார் என்றும் அறிய முடிகிறது. அத்துடன், மனித சமுதாயம் ஒட்டு மொத்தமும் ஒரே மனித மதத்தில் நின்று, எங்கும் நிறைந்த பரம் பொருளான இறைவனை மட்டுமே வணங்கி, அவனைச் சரணடைந்து விடுவதன் மூலமே இறைவனைக் காணவும், பிறப்பு-இறப்பு அற்ற வீடுபேற்றை அடையவும் முடியும் என்பதனை அழுத்தந் திருத்தமாக ஜயத்திற்கு இடமின்றிக் குறள் பாக்களின் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.பாரதியார் இயற்றிய கவிதைகளும் திருக்குறளால் வளம் பெறும் முறையினைப் பாடுதலே 'வழிவழி வள்ளுவர் ' என்னும் இந்நூலின் நோக்கமாகும்.
Be the first to rate this book.