இயற்கை வளங்களையும் ஆறுகளையும் பாதுகாக்கவேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. மனிதகுலமும் பூமியில் வாழும் உயிரினங்களும் உயிர்வாழ நீரின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் இயற்கை வளங்களை அழிப்பது என்பது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் அதிகரித்து வருகிறது. இனி மூன்றாம் உலகப்போர் ஏற்படுமானால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. பல்லாயிரம் கோடி ஏக்கர் நிலங்களில் இருந்த வனங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டு வருகிறது. இப்படியுள்ள சூழ்நிலையில் இயற்கையையும் நீர்ஆதாரங்களையும் பாதுகாப்பதற்கான வாழ்வியல் முறையை மக்களுக்கு கற்றுத்தர வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Be the first to rate this book.