முதியவர்களுக்கு எந்த அளவில் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன?
மலச்சிக்கலுக்கு எத்தகைய உணவுமுறை சிறந்தது?
எலும்புகளின் ஆரோக்கியம் காக்க என்ன செய்யலாம்? வயதான சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற டயட் எது?
இப்படி முதுமையால் வரும் உடல் பிரச்னைகளை எதிர்கொள்ள ஊட்டச்சத்துகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை விரிவாக விளக்குகிறது இந்தப்புத்தகம். ஊட்டச்சத்துகளை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம், அறுபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது .
டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியவர்களுக்கான மருத்துவச் சேவைக்காக பெருமைவாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருது பெற்றவர். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக முதியவர்களுக்கான தனி சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிய இவர், தேசிய முதியோர் நலக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
டாக்டர் என். லக்ஷ்மிபதி ரமேஷ், முதியோர் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். முதியோர் மருத்துவம் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Be the first to rate this book.