“வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு” என்ற புத்தகத்தின் வாயிலாக புத்தகம் படிக்காதவர்களையும், ஒருமுறையேனும் இந்தப் புத்தகத்தை வாசித்தால் பின்னர் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மென்மேலும் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசையை வளர்ப்பதே, இந்தப் புத்தகத்தின் நோக்கம். ஆறு அத்தியாயங்களில், 48 பக்கங்களில், வளரும் தலைமுறை செழிக்கவும், வாழ்வில் ஜெயிக்கவும் புத்தகங்கள் எவ்வாறெல்லாம் வழிகாட்டுகின்றன, புத்தக வாசிப்பு மனிதனை எவ்வாறெல்லாம் பண்படுத்தி நற்பண்பு உடையவனாக உருவாக்குகின்றது என்பதைப் பற்றி அழகாக கூறும் மிக எளிய நடையில் எழுதப்பட்ட நூல்.
Be the first to rate this book.