மேப் கிடையாது. திசைகாட்டி இல்லை. தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இல்லை. வாஸ்கோடகமாவிடம் இருந்தது நம்பிக்கை மட்டுமே. ஆனால் நம்பிக்கையை மட்டுமே கொண்டு ஒரு கப்பலைச் செலுத்தமுடியுமா?
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள். கையிருப்பில் இருந்த நீரும் உணவும் கரைந்துகொண்டு இருந்தது. நிலப்பரப்பு தட்டுப்படுமா? ஆம் எனில் எது போன்ற நிலப்பரப்பு? அங்கு வாழ்பவர்கள் எதிரிகளா, நண்பர்களா? தெரியாது. அச்சத்தையும் தயக்கத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இழப்புகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முன்னேறினார் வாஸ்கோடகமா. வெற்றிகரமாக இந்தியா வந்து அடைந்தார். இந்தியச் சரித்திரத்தை மாற்றியமைத்த முக்கிய பயணியான வாஸ்கோடகமாவின் விறுவிறுப்பான சாகசக் கதை.
Be the first to rate this book.