என் இளமைக்காலத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மனதின் சலனங்களை, என்னவென்று விளங்காத உருவமற்ற உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து என் கண்முன்னே என்னையே நிறுத்திவிட்டார் துர்களேவ். ருஷ்ய எழுத்தாளர்கள் காதலைப் பற்றி எழுதும்போது காதல் தேவதையான வீனஸின் மடியில் உட்கார்ந்து எழுதுகிறார்களோ என்று தோன்றும். அவற்றையெல்லாம் வாசிக்கும்போது அன்பின் சுடரொளி மனம் முழுவதும் நிறைந்து அறிவும், உடலும் அன்பின் ஒளியை வீசும் இந்த உலகம் மிக அழகானதாக மாறி விடும். இவான் துர்கனேவ் அவர்களே! நான் உங்களை என் இதயத்தின் அடியாழத்திலிருந்து வாழ்த்துகிறேன். நீங்கள் உலக இலக்கிய வரலாற்றில் மூன்று காதல் கதைகளின் வழியாக நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.
Be the first to rate this book.