பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு முனையில், வசையும் கொச்சையும் மறு முனையில் என்ற உயிரோசை கொண்டது நாவலின் மொழி. ஒரு சிறு நகரத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை அவற்றைக் கடந்த பெரிய உலகத்தின் உயிர்த்துடிப்புள்ள சித்திரமாக விரிக்கிறது நாவலாசிரியரின் கலை விகாசம்.
சிறுகதைகளும் வேறு இரண்டு நாவல்களும் எழுதியுள்ள மார்ட்டீன் ஓ’ கைனின் சில படைப்புகள் அவருடைய மறைவுக்குப் பின்பே வெளியாயின. நார்வேஜியன், டேனிஷ், ஜெர்மன், பிரெஞ்சு, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள ‘வசை மண்’ இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் வெளியாகிறது.
Be the first to rate this book.