அய். இளங்கோவன், வேலூரில் உள்ள எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர் எழுதிய ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்’ என்னும் நூல் ‘தலித் முரசு’ இதழில் ஆகஸ்ட் 2008 முதல் சனவரி 2009 வரை இக்கட்டுரைத் தொடர் வெளிவந்தது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் ‘கேரளா கல்விச் சட்டம் 1957’ என்ற வழக்கில் தனது கருத்தினை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், எந்த மாநில அரசும், மய்ய அரசும் இக்கருத்தினை (1958) செயலாக்க இந்நாள் வரை முயற்சி எடுக்கவில்லை. மொத்தத்தில் சாதிமயமாக்கப்பட்டுவிட்ட சிறுபான்மை நிர்வாகங்களின் அடாவடித்தனமும், சமூக நீதிக் காவர்களின் பொறுப்பற்ற தன்மையும், அரசின் பாராமுகம் தலித் மக்களையும் பழங்குடியினரையும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளன.
“சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட. அந்த நோக்கமாவது நிறைவேற்றப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை சமூகத்து மாணவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கிறார் இங்கு சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகமாக உள்ளனர்.” மறுக்க முடியாத தரவுகளுடன் இதுவரை எவரும் கேட்டிராத கேள்விகளை பேராசிரியர் அய். இயங்கோவன் எழுப்பியிருக்கிறார்.
Be the first to rate this book.