Startups எனப்படும் தொடக்கநிலை நிறுவனங்கள் அளவில் சிறியவை. அவற்றைத் தொடங்கி நடத்தும் மனிதர்களும் மிக எளியவர்கள்தான். ஆனால், கனவில், உழைப்பில், ஊக்கத்தில் பெருநிறுவனங்களால்கூட அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கமுடியாது. நாளைய உலகம் எங்கு செல்லும், எங்கு செல்லவேண்டும் என்பதைத் தீர்மானித்து அதில் தங்களுக்கான இடத்தை உரிமையுடன் பெற்றுக்கொண்டு கம்பீரமாக அமர்கிறவர்கள் இவர்கள்.
உலகெங்கும் சிறிய பொறியை ஊதிப் பெரிதாக்கும் வெறியுடன் ஏராளமான இளைஞர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வருங்காலம் கண்டிப்பாக அவர்கள் கையில்தான்.
கடந்த சில ஆண்டுகளில் உலகின் போக்கைத் தீர்மானித்துள்ள முக்கியமான நிறுவனங்களுடைய வெற்றிக் கதைகளை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம், நாளைய உலகம் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்றால் அதற்கு நாம் எப்படிச் சிந்திக்கவேண்டும், எப்படிச் செயல்படவேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம்.
Be the first to rate this book.