ஜகாத், ஒரு வழிபாடு மட்டுமின்றி வறுமை ஒழிப்புத் திட்டமும், பொருளாதார சமூகப் பாதுகாப்புத் திட்டமும் ஆகும்; அது பொருள் வழி வணக்கம் மட்டுமின்றி சமூக வாழ்வின் இருள் நீக்கும் வழிமுறையுமாகும். அதன் அடிப்படையில் ஜகாத்தின் முழு விவரங்களையும் ஆராய்ந்து, மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கேற்ப ஜகாத்தை விளக்கிக் கூறும் ஒரு நூல் இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்து வந்தது. அக்குறையை நீக்கும் வகையில் உங்கள் கைகளில் தவழும் இந்நூல் வெளிவந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
Be the first to rate this book.