எந்தவோர் எழுத்தும் பேனா முனையிலிருந்து தானாக வந்து விடுவதில்லை. அதற்காக அந்த நூல்களின் ஆசிரியர்கள் கொடுக்கின்ற உழைப்பு அதீதமானது. நூல் அறிமுகங்களில் பெரும்பாலானவை சமகால ஆசிரியர்களிடமிருந்து உருவானவை. ஒவ்வொரு படைப்பும் ஒரு கை ஓசையாக இருந்து விடாமல், பலராலும் வாசிக்கப்பட வேண்டிய வகையில் 30 நூல்களுக்கு எழுதிய மதிப்புரைகளைத் தொகுத்துள்ளார். நூலின் கருத்தை மட்டும் மனதில் கொண்டு வாசித்தபோது எழுந்த தாக்கங்களை, நூலுக்கு அப்பாற்பட்டு அதன் வரிகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளையும் இயன்றவரை கண்டெடுத்து வழங்கியிருக்கிறார். பல்வேறு நூல்களை வாசிக்கின்ற அனுபவத்தைப் பெற்று, ஒரு பரந்த பார்வையைக் கொண்டு, புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.
Be the first to rate this book.