இஸ்லாத்துடன் முஸ்லிம் பெண்களுக்கான தொடர்பு என்பது வெறும் புர்கா அணிவது மட்டுமே என்று அனேகமானவர்கள் கருதுகின்றனர். ஆயினும் உண்மையோ அதற்கு நேர்மாறாக உள்ளது. இஸ்லாம் என்பது உயர்ந்த விழுமியங்களாலும் சிறந்த சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு மார்க்கம். அது சமூகத்தளத்தில் பெண்களுக்கென தனிப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
வேறெந்த மதமும் வழங்காத சகல உரிமைகளையும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. இஸ்லாத்தைக் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதற்கும், அபாண்டங்களை அள்ளி வீசுவதற்கும் பெண்கள் குறித்த இந்த அறியாமையையே தங்களுக்கான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இது பெண்களுக்கான நூல் மட்டுமல்ல, மாறாக ஆண்களுக்குமான நூலும் கூட. இஸ்லாமிய மார்க்கம் நமது தாயை, நமது சகோதரியை, நமது மகளை எவ்வளவு தூரம் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொண்டால்தானே அதனை பிறருக்கும் எடுத்துச் சொல்லமுடியும்.
அந்த அடிப்படையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்து வரலாறு படைத்த பெண்கள் எனும் இச்சிறிய நூல் பேசுகிறது.
Be the first to rate this book.