இராசோவின் கட்டுரைகளைத் தொகுப்பதன் நோக்கம், எந்தவொரு கட்சியையும் அமைப்பையும் தலைவர்களையும் புண்படுத்தும் எண்ணம் கொண்டதல்ல. ஈழப்போர் உச்சத்தில் இருந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழகம் மவுன சாட்சியாக நின்றது என்பதையும் தமிழ்நாட்டின் அப்போதைய நிலைமைகளையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளன இந்தக் கட்டுரைகள்.
கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, தமிழர் நலன் மற்றும் உரிமை காக்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும். ஈழப் போரில் பின்னடைவு என்பதால் எல்லாமும் முடிந்துவிட்டது என்று கண்மூடித்தனமாகச் சோர்ந்துவிடாமல் மீண்டும் எழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கையை ஊக்குவிப்பதே இந்நூல்.
Be the first to rate this book.