தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற "வரலாற்றுச் சுவடுகள்" நூலின் நான்காம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, உடனடியாக விற்பனையாகி, பதிப்புத்துறையில் மவுனப் புரட்சியை நடத்திக்காட்டியது, "வரலாற்றுச் சுவடுகள்". இப்புத்தகத்தை வாங்க, வாசகர்கள் நீண்ட "கியூ" வரிசையில் நின்ற காட்சியை, முதல் முதலாகப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் கண்டு வியந்தனர். இப்போது, நான்காம் பதிப்பில், 2013, 2014 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், 2015ல் இதுவரை நடந்துள்ள முக்கிய நிகழ்ச்சிகளும் 32 பக்கங்கள் கொண்ட இணைப்பில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக நரேந்திரமோடி பிரதமரானது, இலங்கை தேர்தலில் ராஜபக்சே தோல்வி, இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் "ஆம் ஆத்மி" கட்சியின் வெற்றி முதலியவை, புதிதாக இடம் பெற்றுள்ள முக்கிய செய்திகளில் சில. ஏராளமான வண்ணப் படங்களுடன் வழுவழுப்பான ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ள இப்புத்தகம், தரத்திலும், அமைப்பிலும் மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்துள்ளது.
Be the first to rate this book.