இறுதித்தூதரின் மறைவுக்குப் பின்பு, எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்தாலும் உயிர்ப்புள்ள சமூகமாகத்தான் முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது. ஒரு போதும் முஸ்லிம் சமூகம் இறந்து விடவில்லை. இறந்து விடாது. அதற்கு காரணம், சமூகத்தில் அவ்வப்போது தோன்றும் ‘தலைவர்கள்’ என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஸ்லிம் உம்மத்திடமிருந்து, இஸ்லாத்தை புத்துயுரூட்டுபவர்களை அல்லாஹ் தோற்றுவிப்பான். (நபிமொழி)
உலகாதாயத்தின் மீதான ஆசையும் மரணத்தின் மீதான வெறுப்பும் அதிகரிக்கும் காலமெல்லாம் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இப்படி வீழ்ச்சியடைந்த சமூகத்தை மீட்டெடுக்க, 20ஆ-ம் நூற்றாண்டில் உழைத்த புத்துயிர்ப்பாளர்களில் சிலரைப் பற்றிய நூல்தான் இது.
Be the first to rate this book.