சஞ்சீவ் சன்யால் ஒரு பொருளாதார அறிஞர். ஆனாலும் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர். லண்டன் ராயல் நிலவியல் கழகத்தில் இவர் உறுப்பினர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியர். உலகப் பொருளாதார மன்றத்தால் 2010 ஆம் ஆண்டிற்கான இளம் உலகத் தலைவர் விருது பெற்றவர். அமெரிக்க நாட்டின் ஐசன் ஹோவர் ஆய்வறிஞர் விருது பெற்றவர். தில்லி ஸ்ரீராம் கல்லூரி, ஆக்ஸ்போர்டு செயிண்ட் ஜான் கல்லூரிகளில் பயின்றவர்.
சஞ்சீவ் சான்யால் எழுதியிருக்கும் இந்துமாக் கடல் குறித்த இந்த நூல் ஒரு புதிய அணுகுமுறையாக – ஒரு குறிப்பிட்ட கடலோர நாடுகளின் வரலாற்றை ஆராய்கிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா முக்கியமான நாடாக இருப்பதால் நூலாசிரியருக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம்.
இந்திய வரலாற்றுடன் அருகிலுள்ள நாடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன. நூலின் பல பகுதிகள் சுவை மிக்க கதை போல ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாறு எத்தனை கோணங்களில் எழுதப்பட்டு வருகிறது என்று உணர்வதற்கும் இந்நூல் சான்றாக இருக்கும்.
விவாதத்திற்கு வழி வகுக்கும் இந்நூலைத் தேர்ந்த மொழிபெயர்ப்பு வல்லுநரான சா. தேவதாஸ் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மொழிபெயர்ப்பு, ஆய்வு, விமர்சனத் துறைகளில் முனைப்பு மிக்கவராக விளங்குகின்றார். 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றவர்.
ஏறத்தாழ முப்பது மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்திருக்கும் தேவதாஸ் லடாக்கிலிருந்து கவிழும் நிழல், பாப்லோ நெருடா நினைவுக் குறிப்புகள், புலப்படாத நகரங்கள், குளிர்கால இரவில் ஒரு பயணி முதலிய அரிய மொழிபெயர்ப்புகள் தந்தவர்.
Be the first to rate this book.