ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் (commissar) வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்தது இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகியல் மனிதம் சார்பான சிந்தனைப் போக்கினை உயர்த்திப் பிடித்தது. தொழில் சமுதாயத்துக்குள் நிகழும் அந்நியமாதல் போக்கு குறித்த மார்க்சின் கோட்பாட்டுக்கு விளக்கமளித்தது. “மரபார்ந்த மார்க்சியம் என்பது எது?” உள்ளிட்ட அவரது உலகப் புகழ்பெற்ற மார்க்சிய இயக்கவியல் குறித்த கட்டுரைகள் இந்த நூல் தமிழில் முதன்முறையாக தோழர் கி.இலக்குவனின் சரளமான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.
Be the first to rate this book.